சிவன் கோவில்களில் மகா சிவராத்திரி வழிபாடு


சிவன் கோவில்களில் மகா சிவராத்திரி வழிபாடு
x
தினத்தந்தி 20 Feb 2023 12:15 AM IST (Updated: 20 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தியாகதுருகம் பகுதி சிவன் கோவில்களில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழா வழிபாட்டில் பக்தர்கள் விடிய விடிய கண்விழித்து இருந்து சாமி தாிசனம்செய்தனர்.

கள்ளக்குறிச்சி

கண்டாச்சிமங்கலம்

நஞ்சுண்ட ஞானதேசிக ஈஸ்வரர்

தியாகதுருகம் பஸ் நிலையம் அருகே பிரசித்திபெற்ற நஞ்சுண்ட ஞானதேசிக ஈஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் மகா சிவராத்திரி விழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான மகா சிவராத்திரி விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதையொட்டி சாமிக்கு இரவு முழுவதும் நான்கு கால சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பக்தர்கள் இரவு முழுவதும் கோவில் பிரகாரத்தை வலம் வந்து சாமி தரிசனம் செய்தனர்.

நந்திக்கு அபிஷேகம்

முன்னதாக பிரதோஷத்தையொட்டி நந்திக்குபால், தயிர், சந்தனம், உள்ளிட்ட 16 வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்து வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல் தியாகதுருகம் அருகே சிறுநாகலூர் கிராமத்தில் யோகநாயகி உடனுறை ஆத்மநாதசுவாமி, வடபூண்டி கனகாம்பிகை சமேத கைலாசநாதர், முடியனூர் அண்ணாமலை ஈஸ்வரர், கனங்கூர் பர்வதவர்த்தினி சமேத ராமநாத ஈஸ்வரர் உள்ளிட்ட பல்வேறு சிவன் கோவிலில் மகா சிவராத்திரியையொட்டி நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.


Next Story