மகா சூலினி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா


மகா சூலினி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா
x

மகா சூலினி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா நடந்தது.

திருச்சி

சமயபுரம்:

மண்ணச்சநல்லூர் அருகே கவுண்டம்பட்டி மேலூரில் மகா சூலினி மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு கடந்த 26-ந்தேதி கரகம் பாலித்தல் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது. 28-ந்தேதி இரவு மாவிளக்கு பூஜை நடைபெற்றது. 29-ந்தேதி காலை ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து கோவிலுக்கு வந்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்த்திருவிழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து அம்மன் தேரில் எழுந்தருளினார். பின்னர் மேளதாளங்கள் முழங்க, அதிர்வேட்டுகள் ஒலிக்க பக்தர்கள் தேரை இழுத்தனர். பக்தர்கள் தங்கள் வீடுகளுக்கு முன்பு ஆடுகள் வெட்டியும், தேங்காய் உடைத்தும் பயபக்தியுடன் அம்மனை வழிபட்டனர். விழாவில் மயில் பர்னிச்சர் உரிமையாளர் செந்தில்குமார் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து மஞ்சள் நீராட்டுடன் அம்மன் குடிவிடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் மற்றும் பட்டயதாரர்கள் செய்திருந்தனர்.


Next Story