மகாளய அமாவாசை: முன்னோர்களுக்கு தர்ப்பணம்


மகாளய அமாவாசை: முன்னோர்களுக்கு தர்ப்பணம்
x

பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.

காஞ்சீபுரம்,

ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை அன்று பொதுமக்கள் கடல், ஆறு, குளம் போன்ற நீர்நிலைகளில் நீராடி மறைந்த தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்வர்.

அந்த வகையில் காஞ்சீபுரத்தில் உள்ள சர்வதீர்த்தகுளம், புண்ணியகோட்டீஸ்வரர் கோவில் குளம், கச்சபேஸ்வரர் கோவில் குளம், தாயார் அம்மன் குளம், திருப்புட்குழி விஜயராகவ பெருமாள் கோவில் குளம், பாலாறு உள்ளிட்ட இடங்களில் நேற்று அதிகாலை முதலே நீண்ட வரிசையில் இருந்து பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.

செங்கல்பட்டு வேதாச்சலநகரில் உள்ள ராமர் கோவில் குளம், சிங்கப்பெருமாள் கோவில் பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் குளம் பகுதிகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து பொதுமக்கள் தர்ப்பணம் கொடுத்தனர்.

அந்த வகையில் மகாளய அமாவாசையையொட்டி செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியை சேர்ந்தவர்கள் நேற்று அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.


Next Story