மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்


மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
x
தினத்தந்தி 21 Aug 2023 6:55 PM IST (Updated: 21 Aug 2023 7:46 PM IST)
t-max-icont-min-icon

மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

திருப்பூர்

குடிமங்கலம்

குடிமங்கலத்தை அடுத்த ஆமந்தகடவு ஜமீனுக்கு உட்பட்ட கிராமத்தில் செல்வ விநாயகர், மாகாளியம்மன், மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. மகா கும்பாபிஷேக யாக பூஜை நிகழ்வுகளை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் தீர்த்தம் எடுத்து வந்தும், முளைப்பாரி எடுத்து வந்தும் வழிபாடு மேற்கொண்டனர்.

நிகழ்ச்சியில் சாந்தி ஹோமம், திசா ஹோமம், சம்ஹிதா ஹோமம், மூர்த்தி ஹோமம், நவக்கிரக ஹோமம், அக்னி சங்கிரகணம், சயனாதி வாசம், கோபுர கலசம் வைத்தல், பரிவார தெய்வங்களுக்கு அஷ்ட பந்தன மருந்து சாத்துதல் நிகழ்ச்சிகளுடன் 33 குண்ட யாகசாலை வேள்வி, விசேஷ சாந்தி, பூத சுத்தி, கோபூஜை, அஸ்வ பூஜை உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றது. நேற்று விமான கோபுரங்கள், கருவறையில் உள்ள மூலவர் செல்வ விநாயகர், மாகாளியம்மன், மாரியம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை ஆமந்தகடவு ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.


Next Story