மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
நெகமம்
நெகமம் அடுத்த சின்னேரிபாளையத்தில் மாகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பாலவிநாயகர், மாகாளியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக விக்னேஷ்வர பூஜை, புண்யாகவாசனம், மகாலட்சுமி ஹோமம், நிலத்தேவர் வழிபாடு, ராமர் கோவிலில் இருந்து தீர்த்த குடம் மற்றும் முளைப்பாரி ஊர்வலம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது.
பின்னர் அங்குரார்பணம், ரக்ஷாபந்தனம், கும்ப அலங்காரம், முதற்கால பூஜை, திரவியாகுதி நடைபெற்றது. தொடர்ந்து விமான கோபுர கலச ஸ்தானம், எந்திர ஸ்தானம், அஷ்ட பந்தனம் (எண்வகை மருந்து சாத்துதல்) மற்றும் விக்கிரகங்கள் நிலை நிறுத்துதல் நடந்தது. மேலும் நாடிசந்தானம், மகா பூர்ணாகுதி, யாத்ராதானம் நடைபெற்றது.
இதையடுத்து தீர்த்த குடங்கள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு பாலவிநாயகர், மாகாளியம்மன் பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மகா அபிஷேகம், தசதரிசனம், தீபாராதனை காண்பித்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.