மகாமாரியம்மன் தீ மிதி திருவிழா


மகாமாரியம்மன் தீ மிதி திருவிழா
x

சீர்காழி தென்பாதியில் மகாமாரியம்மன் தீ மிதி திருவிழா நடந்தது

மயிலாடுதுறை

சீர்காழி

சீர்காழி தென்பாதியில் கரையாள் என்கிற மகாமாரியம்மன் கோவிலில் கடந்த 1-ந் தேதி கொடி ஏற்றத்துடன் திருவிழா தொடங்கியது. திருவிழாவையொட்டி தினமும் அம்மனுக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு கோவில் வளாகத்தில் வீதிஉலா நடைபெற்றது. தொடர்ந்து நேற்று காலை உப்பனாற்றங்கரையில் இருந்து பக்தர்கள் கரகம், பால்குடம், அலகு காவடி, தீச்சட்டி எடுத்து தென்பாதி மெயின் ரோடு, வ.உ.சி. தெரு, மாரிமுத்து நகர் வழியாக கோவிலை வந்தடைந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் அம்மனுக்கு பால், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

தீக்குண்டம் இறங்கிய பக்தர்கள்

அதனைத்தொடர்ந்து இரவு கோவிலின் முன்பு அமைக்கப்பட்ட தீ குண்டத்தில் பக்தர்கள் இறங்கி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு அம்மன் வீதியுலா நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கிராமமக்கள் செய்திருந்தனர். சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.






Next Story