மகாமாரியம்மன் கோவில் தேரோட்டம்


மகாமாரியம்மன் கோவில் தேரோட்டம்
x

சங்கராபுரம் அருகே மகா மாரியம்மன் கோவில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

கள்ளக்குறிச்சி

சங்கராபுரம்,

சங்கராபுரம் அருகே மூரார்பாளையம் கிராமத்தில் மகாமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா கடந்த 20-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினந்தோறும் சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன. மேலும் ஊரணி பொங்கல், காத்தவராயன் திருக்கல்யாணம், கழுமரம் ஏறுதல், காளிகோட்டை இடித்தல் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம், தேன் உள்பட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது.

அலங்கரிக்கப்பட்ட தேர்

பின்னர் சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து அலங்கரிக்கப்பட்ட தேரில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளினார். அப்போது அங்கிருந்த பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் நிலையை வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.


Next Story