மகாமுத்துமாரியம்மன் கோவில் ஆண்டு பெருவிழா


மகாமுத்துமாரியம்மன் கோவில் ஆண்டு பெருவிழா
x

மகாமுத்துமாரியம்மன் கோவில் ஆண்டு பெருவிழா நடைபெற்றது.

திருச்சி

கல்லக்குடி முத்துமாரியம்மன் நகரில் மகாமுத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் ஆண்டு பெருவிழா கடந்த 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான நேற்று ஏரிக்கரையில் இருந்து தீர்த்தம், பால்குடம், அலகுபோட்டு அக்னிசட்டி எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. இரவில் அம்மன் சிம்மவாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) பொங்கல், மாவிளக்கு வைத்தல் நிகழ்ச்சியும், அம்மனுக்கு சிறப்பு பூ அலங்காரம் செய்யும் நிகழ்ச்சியும் நடக்கிறது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படுகிறது. இரவு குதிரை வாகனத்தில் சாமி புறப்பாடு நடைபெறும்.விழாவின் சிகரநிகழ்ச்சியாக நாளை (திங்கட்கிழமை) தேரோட்டம் நடக்கிறது. 2-ந் தேதி மஞ்சள் நீராட்டுவிழாவுடன் திருவிழா நிறைவுபெறுகிறது.


Next Story