மகாசக்தி முச்சந்தி மாரியம்மன் கோவில் முளைப்பாரி திருவிழா
மகாசக்தி முச்சந்தி மாரியம்மன் கோவில் முளைப்பாரி திருவிழா நடைபெற்றது
சோழவந்தான்
சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் மகாசக்தி முச்சந்தி மாரியம்மன் கோவில் 146-ம் ஆண்டு முளைப்பாரி திருவிழா நடந்தது. இவ்விழாவை முன்னிட்டு முதல் நாள் அம்மனுக்கு முத்து பரப்புதல் நடந்து அபிஷேகம் ஆராதனை காப்புக் கட்டுதல் நடைபெற்றது. மேலும் பூச்சொரிதல் விழா நடந்தது. பால்குடம், அக்னிசட்டி, காவடி எடுத்து வந்தனர். ஒயிலாட்டம், கும்மியாட்டம், சிலம்பாட்டம், வானவேடிக்கை, மேளதாளத்துடன் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. காலை சக்திகரகம், விளையாட்டு கரகம் மற்றும் முளைப்பாரி வைகை ஆற்றில் கரைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. சாமி வேடம் அணிந்து பக்தர்கள் வந்தனர். இரவு கலை நிகழ்ச்சி நடந்தது. திருவிழாவில் எம்.வி.எம். குழுமத்தலைவர் மணிமுத்தையா, கவுன்சிலர் வள்ளிமயில், மதச்சார்பற்ற ஜனதா கட்சி மாநிலபொதுச்செயலாளர் செல்லப்பாண்டி, சமயநல்லூர் ஊராட்சி தலைவர் மலையாளம், விழா கமிட்டியினர் ரங்கராஜன், ரவி, அய்யப்பன், ராஜேந்திரன், நடராஜன், மூர்த்தி உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். சோழவந்தான் இன்ஸ்பெக்டர் பால்ராஜு, காடுபட்டி சப்-இன்ஸ்பெக்டர் குபேந்திரன் உள்பட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.