மகாவீர் ஜெயந்தி விழா
கழுகுமலையில் மகாவீர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
தூத்துக்குடி
கழுகுமலை:
கழுகுமலை 1008 மகாவீர் அதிசய ஷேத்திர கமிட்டி சார்பில் பகவான் மகாவீரரின் 2622-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பா.ஜ.க. மாவட்ட துணை தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். திருவள்ளுவர் கழக தலைவர் பொன்ராஜ்பாண்டியன், செயலாளர் முருகன், பொருளாளர் சிவராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மகாவீர் அதிசய ஷேத்திர கமிட்டி நிறுவன தலைவர் முகேஷ் ஜெயின் வரவேற்றார். தொடர்ந்து மகாவீரருக்கு சிறப்பு வழிபாடு, தெய்வ ஆராதனை நடந்தது. தொடர்ந்து ராதா குழுவினரின் பக்தகானங்கள் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story