குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் மகிஷா சூரசம்ஹாரம் விமர்சையாக நடைபெற்றது


குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் மகிஷா சூரசம்ஹாரம் விமர்சையாக நடைபெற்றது
x

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் நடைபெற்ற மகிஷா சூரசம்ஹாரத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டன்ர்.

குலசேகரன்பட்டினம்,

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா உலக பிரசித்தி பெற்றது. இந்தியாவில் கர்நாடக மாநிலம் மைசூருக்கு அடுத்தபடியாக இங்குதான் பல லட்சக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடனாக பல்வேறு வேடங்களை அணிந்து அம்மனை வழிபடுகின்றனர்.

கோவிலில் இந்த ஆண்டு தசரா திருவிழா கடந்த 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் பல்வேறு கோலத்தில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

தினமும் காலை முதல் இரவு வரையிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், மாலையில் சமய சொற்பொழிவு, பல்சுவை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. விழாவையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசித்தனர்.

8-ம் நால் இரவில் கமல வாகனத்தில் கசலட்சுமி கோலத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 9-ம் நாள் இரவில் அன்ன வாகனத்தில் கலைமகள் கோலத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றார். இந்நிலையில் 10-ம் நாளான இன்று நள்ளிரவு 12 மணிக்கு விழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் நடைபெற்றது.

இந்த சூரசம்ஹாரத்தில் நள்ளிரவு 12 மணிக்கு அம்மன் கடற்கரை சிதம்பரேஸ்வரர் கோவில் முன்பாக எழுந்தருளி மகிஷா சூரசம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மகிஷா சூரசம்ஹாரத்தை முன்னிட்டு குலசை கடற்கரையில் பக்தர்கள் கூட்டம் நிரம்பியது. மேலும் பக்தர்கள் அதிக அளவில் வருவதால் ஏராளமான சிறப்பு பேருந்துகளை அரசு ஏற்பாடு செய்திருந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் பக்தர்களுக்கு அனுமதி வழங்கி உள்ளதால் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

இதற்காக ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர். கண்கானிப்பு கேமரா மூலம் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.பக்தர்கள் மற்றூம் தசரா குழுவினருக்கு தனித்தனி பாதைகள் அமைத்து போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

1 More update

Next Story