"கானகத்திற்குள் கரூர்" திட்டத்தில் மரங்கள் பராமரிப்பு ஆய்வு
"கானகத்திற்குள் கரூர்" திட்டத்தில் மரங்கள் பராமரிப்பு ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டத்தில் அ.தி.மு.க. முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், எம்.ஆர்.வி. டிரஸ்ட்டின் மூலம் "கானகத்திற்குள் கரூர்" என்ற செயல் திட்டம் மூலமாக கரூர் மாவட்டத்தை பசுமையாக்கும் வகையில் கடந்த 2019 முதல் 2021-ம் ஆண்டு வரை 30,000-க்கும் மேற்பட்ட மகிழம், மந்தாரை, சரக்கொன்றை, பூவரசன், பூங்கம் உள்ளிட்ட நாட்டு மரங்கள் நடப்பட்டு தொடர்ச்சியாக தண்ணீர் ஊற்றி மரங்களை சுற்றி உள்ள மண்களை அகற்றி பராமரிக்கப்பட்டு வருகிறது.அந்தவகையில் தற்போது மழை காலம் தொடங்க உள்ள நிலையில் மரங்களின் பராமரிப்பு பணியானது கடந்த சில தினங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று கரூர் 80 அடி சாலையின் அருகே உள்ள மரங்களை முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது மரக்கிளைகள் மின்சார கம்பங்களில் உரசாமல் இருக்கும் வகையிலும், மரங்களை சுற்றி உள்ள குப்பைகளை அகற்றி தண்ணீர் தேங்கும் வகையிலும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என எம்.ஆர்.வி - டிரஸ்ட் தன்னார்வலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.