மேல்பாக்கம் ரெயில்வே கேட் பகுதியில் பராமரிப்பு பணி


மேல்பாக்கம் ரெயில்வே கேட் பகுதியில் பராமரிப்பு பணி
x

மேல்பாக்கம் ரெயில்வே கேட் பகுதியில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் மாற்றுப்பாதையை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை

அரக்கோணம் - ஓச்சேரி பிரதான சாலையில் மேல்பாக்கம் பகுதியில் உள்ள அரக்கோணம் - காஞ்சீபுரம் ரெயில் மார்கத்தின் ரெயில்வே கேட் பகுதியில் இன்று (புதன்கிழமை) முதல் 27-ந் தேதி வரை இரவு 9 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே, அத்தியாவசிய தேவைக்கு பொது மக்கள் மற்றும் வாகனங்கள் மேற்குறிப்பிட்டுள்ள நாட்களின் இரவில் ரெயில்வே கேட் பகுதியை பயன்படுத்துவதை தவிர்த்து பருத்திபுத்தூர் வழியாக கும்பினிபேட்டை செல்லும் சாலையினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அரக்கோணம் தாசில்தார் சண்முக சுந்தரம் தெரிவித்துள்ளார்.


Next Story