பாராமரிப்பு பணி: மருதூர் ரெயில்வே கேட் 3 நாட்கள் மூடல்


பாராமரிப்பு பணி: மருதூர் ரெயில்வே கேட் 3 நாட்கள் மூடல்
x

பாராமரிப்பு பணிக்காக மருதூர் ரெயில்வே கேட் 3 நாட்கள் மூடப்படுகிறது.

கரூர்

குளித்தலை அருகே உள்ள மருதூர்-மேட்டு மருதூர் செல்லும் சாலையில் ரெயில்வே கேட் ஒன்று உள்ளது. ரெயில்வே நிர்வாகம் சார்பில் இந்த ரெயில்வே கேட்டில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் காரணமாக நாளை காலை 8 மணி முதல், 28-ந் தேதி மாலை 6 மணி வரை 3 நாட்கள் இந்த ரெயில்வே கேட் மூடப்பட்டிருக்கும். இந்த ரெயில்வே கேட் வழியாக செல்லும் வாகனங்கள் மாற்று பாதை வழியாக செல்லுமாறு ரெயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்த அறிவிப்பு மருதூர் ரெயில்வே கேட்டில் ஒட்டப்பட்டுள்ளது.


Next Story