பராமரிப்பு பணிகள்:வில்லாபுரம், பழங்காநத்தம் பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தம்


பராமரிப்பு பணிகள்:வில்லாபுரம், பழங்காநத்தம் பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தம்
x

பராமரிப்பு பணி காரணமாக வில்லாபுரம், பழங்காநத்தம் பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

மதுரை


பராமரிப்பு பணி காரணமாக வில்லாபுரம், பழங்காநத்தம் பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

பராமரிப்பு பணி

மதுரை வில்லாபுரம், அரசரடி, பசுமலை ஆகிய துணை மின் நிலையங்களில் இன்று(வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும்.

அதன்படி வில்லாபுரம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட வில்லாபுரம் ஹவுசிங் போர்டு, சின்ன கண்மாய் மேற்கு பகுதிகள், எப்.எப். ரோடு, வில்லாபுரம் கிழக்கு பகுதிகள், அருப்புக்கோட்டை மெயின் ரோடு, மீனாட்சி நகர், கணபதி நகர், காவேரி தெரு, செந்தமிழ் தெரு, பராசக்தி நகர், சவுடேஸ்வரி அம்மன் கோவில் தெரு, முத்துராமலிங்கம் தெரு, அருஞ்சுனை நகர், மணிகண்டன் நகர், அரவிந்த் தியேட்டர், ஜெய்ஹிந்த்புரம் மெயின் வீதி, பாரதியார் ரோடு, சோலையழகுபுரம் ெதரு, எம்.ேக.புரம், சுப்பிரமணியபுரம் பகுதிகள், சுந்தர்ராஜபுரம், வெங்கடாசலபுரம், எல்.எல்.ரோடு ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும்.

அரசரடி துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட இ.பி. காலனி, பாஸ்டின்நகர் தெரு, ஐ.என்.டி.யூ.சி.காலனி, அண்ணா மெயின்வீதி, திருவள்ளுவர் தெரு, பள்ளிக்கூட குறுக்கு தெரு, ரோஜா தெரு, முல்லை தெரு, மல்லிகை தெரு, தாமஸ்தெரு, காந்திதெரு, அய்யனார் கோவில் தெரு, ஜீவாதெரு பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் லதா தெரிவித்தார்.

பழங்காநத்தம்

பசுமலை துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பழங்காநத்தம் அக்ரகாரம், பசும்பொன்நகர், பழங்காநத்தம் பத்திர ஆபீஸ், பழங்காநத்தம் பஸ் நிலைய நகர் முதல் மற்றும் 6-வது தெரு, நேரு நகர், மாடக்குளம் மெயின் ரோடு, கண்டான் சேர்வை நகர் முழுவதும் தேவி நகர், கிருஷ்ணா நகர், நமச்சிவாய நகர், ஐஸ்வர்யா நகர், அருள் நகர், காயத்ரி தெரு, துரைசாமி நகர் பகுதி, கோவலன் நகர், ஒய்.எம்.சி.ஏ. நகர், இ.பி. காலனி, அழகப்பன் நகர், திருவள்ளுவர் நகர் முழுவதும், யோகியர் நகர் பகுதி, தண்டகாரன்பட்டி ஒரு பகுதி, முத்துப்பட்டி, அழகுசுந்தரம் நகர், கென்னட் நகர், புதுக்குளம், பைக்காரா, பசுமலை முழுவதும், மூட்டா காலனி, விநாயகர் நகர், விளாச்சேரி, திருநகர், பாலாஜி நகர், பாலசுப்பிரமணியன் நகர், ஹார்விபட்டி, மகாலட்சுமி காலனி, முனியாண்டிபுரம், குறிஞ்சி நகர், வேல்முருகன் நகர், நேதாஜி தெரு, ராம்நகர், பைபாஸ் ரோடு, பொன்மேனி, ஜெயன்நகர், ராஜம் நகர், ராகவேந்திரா நகர், மீனாட்சி நகர், கோல்டன் சிட்டி நகர், பாம்பன் நகர், திருமலையூர், தியாகராஜர் என்ஜினீயரிங் கல்லூரி ஆகிய பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும் என செயற்பொறியாளர் உடையப்பன் தெரிவித்துள்ளார்.


Next Story