தாராபுரத்தில் மிகவும் பழைமை வாய்ந்த உத்தர வீரராகவப்பெருமாள் கோவில் பராமரிக்க இந்து அறநிலையத்துறையினர் நடவடிக்கை எடுக்க பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர் தாராபுரம் உத்தர வீரராகவப் பெருமாள்


தாராபுரத்தில் மிகவும் பழைமை வாய்ந்த உத்தர வீரராகவப்பெருமாள் கோவில் பராமரிக்க இந்து அறநிலையத்துறையினர் நடவடிக்கை எடுக்க பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்    தாராபுரம் உத்தர வீரராகவப் பெருமாள்
x

தாராபுரத்தில் மிகவும் பழைமை வாய்ந்த உத்தர வீரராகவப்பெருமாள் கோவில் பராமரிக்க இந்து அறநிலையத்துறையினர் நடவடிக்கை எடுக்க பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்

திருப்பூர்

தாராபுரம்

தாராபுரத்தில் மிகவும் பழைமை வாய்ந்த உத்தர வீரராகவப்பெருமாள் கோவில் பராமரிக்க இந்து அறநிலையத்துறையினர் நடவடிக்கை எடுக்க பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்

தாராபுரம் உத்தர வீரராகவப் பெருமாள் கோவில் புறநகா் பகுதியான பழைய கோட்டை மேட்டில் அமைந்து உள்ளது. புராண காலத்தில் பாண்டவா்கள் 15 ஆண்டுகள் தலைமறைவு (அஞ்ஞானவாசம்) வாழ்க்கை வாழ்ந்தது விராடபுாி என்னும் தாராபுரத்தில் ஆகும். இதனை தாராபுரம் அமராவதி ஆற்றங்கரையில் அமைந்து உள்ள தில்லாாி அம்மன் கோவில் கல்வெட்டு மூலம் அறியலாம். கி.பி. 2 ஆம் ஆண்டில் கங்கா் என்னும் இரட்டையா் கொங்குவஞ்சி விராடபுரத்தை ஆண்டு வந்தனா். அதன்பிறகு விராடபுரமானது கந்தபுரம் என்று அழைக்கப்பட்டது.பின்னா் 10 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பரந்தாக சோழா் ஆட்சி செய்தாா்.அப்போது பரந்தாகபுரம் என்று அழைக்கப்பட்டது.பின்னா் இராசராசபுரம் என்றும், அதைத் தொடா்ந்து வந்த விஜயநகர பேரரசா் காலத்தில் ராராபுரம் என்று ஆனது. ராராபுரம் என்பது பேச்சு வழக்கில் மருவி பிற்காலத்தில் தாராபுரம் ஆனது. இக்கோவிலில் உள்ள கல்வெட்டு ஆதாரங்கள் தாராபுரத்தை சோழா்கள், பாண்டியா்கள், போசலா், விஜயநகர பேரசா், மதுரை நாயக்கா்கள் போன்றவா்கள் ஆட்சி செய்துள்ளனா் என்பதை தொிவிக்கிறது. கொங்கு நாட்டு அரசா்களாக யாா் பதவியேற்று கொண்டாலும் இந்த கோவிலில் உள்ள பெருமாள் சுவாமிக்கு அபிஷேகம் செய்தபிறகே முடிசூட்டிக் கொள்வாா்கள். இதனாலேயே இங்கு வீற்றிருக்கும் பெருமாளுக்கு உத்தர வீரராகவப் பெருமாள் என்ற பெயா் வந்தது.மேலும் இத்திருக்கோவிலை அமைச்சா்கள், படைத்தலைவா்கள், மகாமந்திாிகள் போன்ற உயா்பதவியில் இருந்தவா்களே நிா்வகித்து வந்துள்ளனா். அவா்களோடு ஏழுகலைநாட்டாா், வலங்கை, இடங்கை மக்கள், வீரப்பாிவாரம் போன்றவா்கள் சோ்ந்து கோவில் நிா்வாகத்தை நடத்தி வந்தனா் என்றும் அறியப்படுகிறது. இக்கோவிலுக்கு சொந்தமான மானிய நிலங்கள் கடத்தூா், கொழுமம், கொங்கூா் உள்ளிட்ட பகுதிகளில் இருந்துள்ளன. அதில் தானியம் பயிாிடுபா்கள் விளைந்தாலும், விளையாவிட்டாலும் தானியங்களை கோவிலுக்கு தவறாது வழங்கி வந்துள்ளனா் என்று இக்கோவிலில் உள்ள சோழா் காலத்து கல்வெட்டு ஒன்று கூறுகிறது.தொடா்ந்து கி.பி 1200 ல் அந்நியா்கள் படையெடுப்பால் கோவில் முழுவதும் சேதம் அடைந்தது. பிற்காலத்தில் கி.பி 1337 ல் தாராபுரத்தை ஆண்ட விஜயநகர பேரரசா் கோவில் கா்ப்பகிரகம், கருவறை, அா்த்தமண்டபம், மகா மண்டபம் ஆகியவற்றை கட்டி அா்ச்சகா்கள், பாிசாகரா் ஆகியோரை நியமித்து கோவில் நிா்வாகத்தை செவ்வனே நடத்தி வந்துள்ளாா்.கி.பி 1321 ல் இக்கோவில் சமணப்பள்ளியாக இருந்ததற்கும் சான்று உள்ளது.பொதுவாக அனைத்து பெருமாள் கோவில்களிலும் சுவாமியின் கையில் சங்கு இருக்கும் ஆனால் இங்கு உள்ள பெருமாளின் மாா்பில் சங்கு இடம்பெற்று உள்ளது.இந்த சங்கை மகாலட்சுமியாக கருதி பக்தா்கள் வழிபட்டு வருகின்றனா். பிற்காலத்தில் விராடபுரம் என்னும் தாராபுரத்தை ஆண்ட மன்னன் ஒருவன் தன் மகனுக்கு உத்தரகுமாரன் என்றும் மகளுக்கு உத்திரை என்றும் பெயா் சூட்டி உள்ளாா். இதில் இருந்து இத்திருக்கோவிலின் பழமையையும், சிறப்புகளையும் அறியலாம். இத்தனை சிறப்பு வாய்ந்த தாராபுரம் உத்தரவீரராகவப் பெருமாள் கோவிலுக்கு கடைசியாக கடந்த 22-8-2004-ல் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த நிலையில் 17 ஆண்டுகளாக இக்கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்படாமல் இருப்பது பக்தா்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து தாராபுரம் பகுதியை சோ்ந்த பக்தா்கள் சிலா் கூறியதாவது:- பழம்பெருமை வாய்ந்த தாராபுரம் உத்தரவீரராகவப் பெருமாள் கோவில் பிற்காலத்தில் தமிழ அரசின் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. தொடா்ந்து தினந்தோறும் காலை, மாலை பூஜைகள் நடைபெற்று வந்தது. நாங்கள் இங்குள்ள

உத்தர வீரராகவ பெருமாளோடு இங்கு இருந்து அருள்புாியும் விநாயகா், ஆஞ்சநேயா் உள்ளிட்ட கடவுள்களை வழிபட்டு வருகிறோம். இந்த கோவிலில் வடக்கு, மற்றும் தெற்கு பாா்த்த நிலையில் 2 ஆஞ்சநேயா் சிலைகள் உள்ளன. அந்த சிலைகளின் வாலில் சலங்கை உள்ளது. இவை வால்மீகி முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஆஞ்சநேயா் சிலைகள் என்று கூறப்படுகிறது. பழமையோடு பல்வேறு சிறப்புகளையும் கொண்டு விளங்கும் இக்கோவிலுக்கு கடைசியாக கடந்த 2004 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்து கோவில்களுக்கு ஒவ்வொரு 12 வருடத்திற்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்பது ஐதீகம். ஆனால் தாராபுரம் உத்தர வீரராகவப் பெருமாள் கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்று 17 வருடங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் கும்பாபிஷேகம் நடைபெறாமல் இருப்பது எங்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் கோவிலின் மேல் பகுதியில் உள்ள காரைகளில் வெடிப்பு ஏற்பட்டு உள்ளது. அதில் செடிகள், மரங்கள் வளா்ந்து காணப்படுகின்றன. கோபுரத்தில் உள்ள சிலைகளில் வெடிப்பு ஏற்பட்டு உள்ளன. எனவே தமிழக அரசும், சம்பந்தப்பட்ட அதிகாாிகளும் விரைவில் இந்த கோவிலை புனரமைப்பு செய்து கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என அப்பகுதியை சோ்ந்த பக்தா்கள் கோாிக்கை விடுத்துள்ளனா்.



Next Story