மக்காச்சோள பயிர்கள் சாய்ந்தன


மக்காச்சோள பயிர்கள் சாய்ந்தன
x

சூறைக்காற்றினால் மக்காச்சோள பயிர்கள் சாய்ந்தன.

விருதுநகர்

வத்திராயிருப்பு,

வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. வத்திராயிருப்பு அருகே உள்ள வ.மீனாட்சிபுரம் பகுதியில் பூமிநாதன் என்பவர் 3 ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளம் சாகுபடி செய்து இருந்தார். இந்த பகுதியில் வீசிய பலத்த சூறைக்காற்று காரணமாக 1 ஏக்கர் பரப்பிலான மக்காச்சோள பயிர்கள் சாய்ந்து சேதமானது.

தற்போது இந்த பயிர்கள் கதிர் விட்டு மகசூலுக்கு தயாராக இருந்த நேரத்தில் இதுபோன்று சேதம் ஏற்பட்டுள்ளதாக விவசாயி வேதனையுடன் கூறினார். சேதமடைந்த பகுதிகளை அதிகாரிகள் பார்வையிட்டு நிவாரணத்தொகை வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

1 More update

Next Story