வரத்து குறைவால் மக்காச்சோளம் விலை உயர்வு


வரத்து குறைவால் மக்காச்சோளம் விலை உயர்வு
x

வரத்து குறைவால் மக்காச்சோளம் விலை உயர்ந்தது.

கரூர்

நொய்யல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மக்காச்சோளத்தை கரும்பு மற்றும் மஞ்சள் பயிரில் ஊடுபயிராகவும், தனியாகவும் பயிரிட்டு வருகின்றனர். மக்காச்சோளம் கதிர் நன்றாக விளைந்ததும் கூலியாட்கள் மூலம் சோளக்கதிரை பறித்து நன்றாக உலரவைத்து எந்திரம் மூலம் மக்காச்சோளத்தை பிரித்து எடுக்கின்றனர். பின்னர் உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், சாலைப்புதூரில் செயல்பட்டு வரும் வேளாண்ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

இந்தநிலையில் கடந்த வாரங்களில் ஒரு கிலோ மக்காச்சோளம் ரூ.20-க்கு விற்பனையானது. இந்த வாரம் வரத்து குறைவால் ஒரு கிலோ மக்காச்சோளம் ரூ.22 வரை விற்பனையானது. மக்காச்சோளம் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story