முக்கிய 3 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம்? - யார் யாருக்கு எந்தெந்த துறை?


முக்கிய 3 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம்? - யார் யாருக்கு எந்தெந்த துறை?
x

தமிழக அமைச்சரவையில் மூன்று அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை,

தமிழக அமைச்சரவையில் இருந்து ஆவடி நாசர் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு பதிலாக நியமிக்கப்பட்ட டி.ஆர்.பி.ராஜா, இன்று அமைச்சராக பதவி ஏகிறார்.

அதைத் தொடர்ந்து, மூன்று அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்படுவதாக தெரிகிறது. அதன்படி, நீக்கப்பட்ட ஆவடி நாசரிடம் இருந்த பால்வளத் துறை, தற்போதைய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜுக்கு கொடுக்கப்படுகிறது.

பிடிஆர் பழனிவேல் தியாகராஜனிடம் இருந்து நிதித்துறை பறிக்கப்பட்டு, அவரிடம் தகவல் தொழில்நுட்பத் துறை வழங்கப்படுகிறது. புதிய நிதி அமைச்சராக தங்கம் தென்னரசு நியமிக்கப்படுவார் என தெரிகிறது.

அவரிடம் இருந்த தொழில்துறை, புதிதாக பொறுப்பேற்கும் டி.ஆர்.பி ராஜாவிற்கு வழங்கப்படுகிறது. இந்த இலாகா மாற்றம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்று பிற்பகல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story