மதுராந்தகம் அருகே பெரும் விபத்து: 6 பேர் பலி - திருவண்ணமலை தீப திருவிழாவிற்கு சென்று திரும்பிய போது சோகம்
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே லாரி மீது டாட்டா ஏஸ் வாகனம் மோதி ஏற்பட்ட விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
சென்னை,
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே லாரி மீது டாட்டா ஏஸ் வாகனம் மோதி ஏற்பட்ட விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் டாட்டா ஏஸ் வாகனம் சென்னையை நோக்கி சென்று கொண்டிருந்தது. அதில் 6 பேர் பயணம் செய்து கொண்டிருந்தனர்.
மதுராந்தகம் அடுத்த ஜானகிபுரம் என்ற இடத்தில் டாட்டா ஏஸ் வாகனம் வந்த போது முன்னால் சென்ற கண்டெய்னர் லாரி மீது மோதியது. அப்போது பின்னால் வந்த கனரக வாகனம், டாடா ஏஸ் மீது மோதியது.
இதில் இரண்டு வாகனங்களுக்கும் இடையே சிக்கி டாடா ஏஸ் வாகனம் சுக்கு நூறானதில் அதில் பயணித்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்த 6 பேரும் டாடா ஏஸ் வாகனத்தில் பயணித்தவர்கள் என்பதும், அவர்கள் அனைவரும் திருவண்ணமாலை தீப திருவிழாவிற்கு சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தனர் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.