மதுரை - புனலூர் உட்பட முக்கிய ரெயில்கள் ரத்து - தெற்கு ரெயில்வே தகவல்


மதுரை - புனலூர் உட்பட முக்கிய ரெயில்கள் ரத்து - தெற்கு ரெயில்வே தகவல்
x

இரட்டை ரெயில்பாதை பணிகள் நடப்பதையொட்டி, மதுரை - புனலூர் உட்பட சில முக்கிய ரெயில்கள் 20-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை சில குறிப்பிட்ட தினங்களில் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

திருவனந்தபுரம்:

நாகர்கோவில் - இரணியல், வள்ளியூர் - நான்குநேரி வழித்தடத்தில் இரட்டை ரெயில்பாதை பணிகள் நடப்பதையொட்டி, மதுரை - புனலூர் உட்பட சில முக்கிய ரெயில்கள் 20-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை சில குறிப்பிட்ட தினங்களில் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

ரெயில் எண் - 16729 மதுரை - புனலூர் எக்ஸ்பிரஸ் ரெயில் இம்மாதம் 19,22,26 மற்றும் 29 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.

ரெயில் எண் - 16730 புனலூர் - மதுரை எக்ஸ்பிரஸ் ரெயில் இம்மாதம் 20, 23,27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.

ரெயில் எண் - 16605 மங்களூர்- நாகர்கோவில் ஏர நாடு எக்ஸ்பிரஸ் ரெயில் இம்மாதம் 19,22,26 மற்றும் 29 ஆகிய தேதிகளில் திருவனந்தபுரம் வரை மட்டுமே இயக்கப்படும். அதாவது, திருவனந்தபுரம் - நாகர்கோவில் இடையே ரத்து செய்யப்படும்.

ரெயில் எண் - 16606 நாகர்கோவில்- மங்களூரு ஏரநாடு எக்ஸ்பிரஸ் ரெயில் திருவனந்தபுரத்தில் இருந்து இயக்கப்படும் அதாவது, நாகர்கோவில்- திருவனந்தபுரம் இடையே ரத்து செய்யப்படும்.

ரெயில் எண் - 16650 நாகர்கோவில் - மங்களூரு பரசுராம் எக்ஸ்பிரஸ் ரெயில் இம்மாதம் 20, 23,27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் காலை 5.40 மணிக்கு புறப்படும் (95 நிமிடம் தாமதம் ).

ரெயில் எண் - 06641 நாகர்கோவில்- திருநெல்வேலி ரெயில் 25-ந் தேதி ரத்து செய்யப்படுகிறது.

ரெயில் எண் - 06642 திருநெல்வேலி - நாகர்கோவில் ரெயில் 26 -ந் தேதி ரத்தாகிறது.

ரெயில் எண் - 20691 தாம்பரம்- நாகர்கோவில் அந்த்யோதயா அதிவேக ரெயில் இம்மாதம் 19-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை திருநெல்வேலி வரை மட்டுமே இயக்கப்படும். இந்த ரெயில் திருநெல்வேலி- நாகர்கோவில் இடையே ரத்து செய்யப்படும்

ரெயில் எண் - 20692 நாகர்கோவில் - தாம்பரம் அந்த்யோதயா அதிவேக ரெயில் இம்மாதம் 20-ந் தேதி முதல் 28-ந்தேதி வரை திருநெல்வேலியில் இருந்து புறப்படும்.

ரெயில் எண் - 22628 திருவனந்தபுரம் - திருச்சிராப்பள்ளி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் 20-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை திருநெல்வேலியில் இருந்து புறப்படும்

ரெயில் எண் - 22627 திருச்சிராப்பள்ளி - திருவனந்தபுரம் ரெயில் 20-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை திருநெல்வேலி வரை மட்டுமே இயக்கப்படும்.

ரெயில் எண் - 12689 எம்.ஜி.ஆர் சென்னை- சென்ட்ரல் வாராந்திர அதிவேக ரெயில், 23-ந் தேதி திருநெல்வேலி வரை மட்டுமே இயக்கப்படும்.

ரெயில் எண் - 12690 நாகர்கோவில் - எம்.ஜி.ஆர். சென்னை சென்டிரல் வாராந்திர அதிவேக ரெயில் 25-ந் தேதி திருநெல்வேலியில் இருந்து புறப்படும்.

ரெயில் எண் - 16861 புதுச்சேரி- கன்னியாகுமரி வாராந்திர ரெயில் 26-ந் தேதி திருநெல்வேலி வரை மட்டுமே இயக்கப்படும்.

ரெயில் எண் - 16862 கன்னியாகுமரி- புதுச்சேரி வாராந்திர ரெயில் 26-ந்தேதி திருநெல்வேலியில் இருந்து புறப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது


Next Story