பொங்கலூர் மாகாளியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்


பொங்கலூர் மாகாளியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்
x
திருப்பூர்


சேவூர் அருகே உள்ள பொங்கலூர் மாகாளியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நேற்று விமரிசையாக நடைபெற்றது. இதி்ல் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மாகாளியம்மன் கோவில்

திருப்பூர் மாவட்டம், அவினாசி தாலுகா சேவூர் அருகே பொங்கலூர் என்ற புண்ணிய பூமியில் பொங்கலூர் பாப்பநாயக்கன்பாளையம், பெத்தநாயக்கன்பாளையம், தாசராபாளையம் எனும் 4 கிராமத்தாரின் கிராம தெய்வமாக மாகாளியம்மன் என்னும் திருநாமங்கொண்டு எழுந்தருளி அருளாட்சி செய்கின்றாள்.

இந்த கோவிலில் கும்பாபிேஷகம் நடத்த முடிவு செய்யப்பட்டது இதையொட்டி சிற்ப சாஸ்திர முறைப்படி திருப்பணிகள் செய்யப்பட்டு அழகிய வர்ண கலாபங்கள் செய்யப்பட்டன. இதைத்ெதாடர்ந்து நேற்று காலை 9 மணிக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

முதற்கால யாகபூஜை

முன்னதாக நேற்றுமுன்தினம் மாலை 4 மணிக்கு, அந்தந்த ஊர் விநாயகர் கோவிலில் இருந்து முளைப்பாரி பொங்கலூர் மாகாளியம்மன் கோவிலுக்கு எடுத்து வந்தனர். இதைத்தொடர்ந்து பாப்பநாயக்கன்பாளையத்திலிருந்து அம்மனுக்கு வஸ்திரம் மற்றும் ஆபரணங்கள் கொண்டு வந்தனர். மாலை 5 மணிக்கு கணபதி பூஜை, முதற்கால யாக பூஜை, மகா தீபாராதனைகள் நடைபெற்று பக்தர்களுக்கு, பிரசாதம் வழங்கப்பட்டது.

இரவு 7 மணிக்கு அவினாசி தீரன் கலைக்குழுவினரின் கம்பத்து ஆட்டம் நடைபெற்றது. இரவு 9 மணிக்கு கோபுர விமான கலசம் வைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

கும்பாபிஷேகம்

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று காலை 6 மணிக்கு இருவினை நீக்கிய இறைவிக்கு 2-ம் கால யாகசாலை, நாடிசந்தானம், சாமிக்கு உயிர் ஊட்டல் திரவ்யயாகம், காலை 7.30 மணிக்கு, மகாபூர்ணாகுதி தீபாராதனை, காலை 8 மணிக்கு, கும்பமூர்த்திகள் ஆலயத்தை வலம் வருதல். காலை 8.30 மணிக்கு மாகாளியம்மன் விமான கும்பாபிஷேகம், காலை 8.45 மணிக்கு, மாகாளியம்மன் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து மகா அபிஷேகம், அலங்காரம் மற்றம் மகா தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிேஷக விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

1 More update

Next Story