தர்மசாஸ்தா கோவிலில் மகரஜோதி விழா
காணை தர்மசாஸ்தா கோவிலில் மகரஜோதி விழா நடைபெற்றது.
விழுப்புரம்
விழுப்புரம்,
விழுப்புரம் அருகே காணை கிராமத்தில் பிரசித்தி பெற்ற தர்மசாஸ்தா கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மகரஜோதி விழா சிறப்பாக நடைபெறும். அதுபோல் இந்த ஆண்டு மகரஜோதி விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதையொட்டி காலையில் கோவிலில் உள்ள அய்யப்ப சாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் மாலையில் அய்யப்பனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கோவிலில் 20 அடி உயரத்தில் உள்ள பீடத்தில் மகரஜோதி ஏற்றப்பட்டது. இதில் காணை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story