முன்பதிவு செய்து ரெயில் டிக்கெட்டை கூடுதல் விலைக்கு விற்ற 2 பேர் கைது
முன்பதிவு செய்து ரெயில் டிக்கெட்டை கூடுதல் விலைக்கு விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
சேலம்
சேலம் மாவட்டம் வாழப்பாடியில் ஒரு கடையில் ரெயில்வே டிக்கெட்டை முன்பதிவு செய்து கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக ரெயில்வே பாதுகாப்பு படை குற்றபுலனாய்வுத்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திர மீனாகுமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் நேற்று வாழப்பாடிக்கு சென்று அங்குள்ள ஒரு பொதுசேவை மையம் கடையில் சோதனை செய்தனர். அப்போது, கடையின் உரிமையாளர் பாண்டியராஜ் (வயது 35) மற்றும் வேலை செய்யும் தொழிலாளி கோகுல்ராஜ் (30) ஆகியோர் ரெயில்வே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து அதனை கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story