எவ்வளவு கஷ்டப்பட்டாலும் ஒருநாள் ஜெயிக்க முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது; நடிகர் சிவகார்த்திகேயன் பேட்டி


எவ்வளவு கஷ்டப்பட்டாலும் ஒருநாள் ஜெயிக்க முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது; நடிகர் சிவகார்த்திகேயன் பேட்டி
x

எவ்வளவு கஷ்டப்பட்டாலும் ஒருநாள் ஜெயிக்க முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது என்று நடிகர் சிவகார்த்திகேயன் கூறினார்.

திருச்சி

புகைப்பட கண்காட்சி

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் 'எங்கள் முதல்வர் எங்கள் பெருமை' என்ற தலைப்பில் மு.க.ஸ்டாலின் வாழ்க்கை வரலாற்று புகைப்பட கண்காட்சி திருச்சி புனித வளனார் கல்லூரி மைதானத்தில் கடந்த 23-ந் தேதி முதல் தொடங்கி வருகிற 30-ந் தேதி வரை நடக்கிறது.

கண்காட்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற கூட்டங்கள், தொடங்கி வைத்த திட்டங்கள் உள்பட பல்வேறு நிகழ்வுகளின் 400-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. கண்காட்சியை பிரபல திரைப்பட நடிகர் சிவகார்த்திகேயன் நேற்று பார்வையிட்டார். அப்போது அமைச்சர் கே.என்.நேரு உடனிருந்தார். பின்னர் நடிகர் சிவகார்த்திகேயன் நிருபர்களிடம் கூறியதாவது:-

மாபெரும் தலைவரின் மகன்

நம்ம ஊரு திருச்சி, இங்கு முதல்-அமைச்சரின் வாழ்க்கை வரலாற்று கண்காட்சியை பார்த்ததில் மகிழ்ச்சி. இதை பார்த்ததும் தெரிந்து கொண்டது ஒரே விஷயம்தான். வாழ்க்கையில் பெரிய உயரத்தை அடைய வேண்டுமானால் நிறைய வலிகளையும், தியாகத்தையும் தாண்டித்தான் வர வேண்டும் என்பது தெரிகிறது.

மிகப்பெரிய ஆளுமை கொண்ட மாபெரும் தலைவரின் மகனாக இருந்தாலும் வாழ்க்கையில் நிறைய விஷயங்களை சந்தித்து, சாதித்து இந்த இடத்துக்கு அவர் வந்துள்ளர். அது கண்காட்சியை பார்த்ததும் தெரிந்தது. கண்காட்சியை பார்க்கும்போது, எந்த துறையை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு தூண்டுகோலாக இருக்கும்.

ஜெயிக்க முடியும் என்ற நம்பிக்கை

இது வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் ஒருநாள் ஜெயிக்க முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. நான் கல்லூரி சென்று படித்து, வளர்ந்த திருச்சியில் இதுபோன்ற நிகழ்ச்சியில் பங்கேற்றது மிகவும் மகிழ்ச்சி. அதற்கு அமைச்சர் கே.என்.நேருவுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். முதல்-அமைச்சரின் சிறிய வயது புகைப்படத்தை இதுவரை நான் பார்த்ததில்லை. கண்காட்சியில் அந்த படம் என்னை கவர்ந்தது. அவர் மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதையும் தத்ரூபமாக காட்சிப்படுத்தி இருந்தார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story