ஊட்டியில் மலைச்சாரல் கவியரங்கம்
ஊட்டியில் மலைச்சாரல் கவியரங்கம் நடந்தது.
நீலகிரி
ஊட்டி
நீலகிரி மாவட்ட தமிழ் கவிஞர்கள் சங்கம் சார்பில், 502-வது மலைச்சாரல் கவியரங்கம் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் நடைபெற்றது. இதற்கு தலைவர் கே.எம்.பெள்ளி முன்னிலை வகித்தார். கவிஞர் ஜனார்தனன் மகாகவி பாரதியார் இயற்றிய சின்னஞ்சிறு கிளியே பாடலை பாடி கவியரங்கை தொடங்கி வைத்தார். இதில் கவிஞர்கள் கமலம், சோலூர் கணேசன் அமுதவல்லி, ரமேஷ், ராஜா, மாரியப்பன், சுந்தரபாண்டியன், துரையமுதன், நாகராஜ் ஆகியோர் கலந்து கொண்டு கவிதைகளை வாசித்தனர். தொடர்ந்து புதிதாக கவிதை தொகுப்பு நூலை மன்றம் சார்பில் வெளியிடுவது, அதில் சமுதாய முன்னேற்றத்திற்க்கு தேவையான முற்போக்கான பல்வேறு விஷயங்களை சேர்ப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. மேலும் அடுத்த மாதம் கவியரங்கத்தில் மேற்கொள்ள வேண்டிய நிகழ்ச்சிகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. முடிவில் போஜன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story