மலேரியா ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
சிறுகரும்பூர் ஊராட்சியில் மலேரியா ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
காவேரிப்பாக்கம்
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் ஒன்றியம் சேரி, சிறுவளையம், துறைபெரும்பாக்கம், கீழ்வீராணம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் மத்தியில் மலேரியா ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. சிறுகரும்பூர் ஊராட்சியில் நடந்த மலேரியா ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மோகன்ராஜ் பங்கேற்று பேசினார்.
அப்போது மலேரியா குறித்தும் அதன் அறிகுறிகள் குறித்தும் பொதுமக்களிடையே எடுத்துரைத்தார். மேலும் பொதுமக்கள் எந்தக் காய்ச்சலாக இருந்தாலும் ரத்தப் பரிசோதனை செய்து கொள்வது அவசியம். மலேரியா நோய்க்கு சிகிச்சை அரசு மருத்துவமனைகளில் மட்டுமே இலவசமாக கிடைக்கும், என்றார்.
விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர்கள் குமார், தமிழ்ச்செல்வன், மருத்துவம் சாரா மேற்பார்வையாளர் மோகனசுந்தரம் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி செயலாளர், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.