மலேரியா ஒழிப்பு முகாம்


மலேரியா ஒழிப்பு முகாம்
x

மூங்கில்துறைப்பட்டு பகுதியில் மலேரியா ஒழிப்பு முகாம்

கள்ளக்குறிச்சி

மூங்கில்துறைப்பட்டு

மூங்கில்துறைப்பட்டுபகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அதிக அளவில் மலேரியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் இதை கட்டுப்படுத்தும் வகையில் மூங்கில்துறைப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் மணிகண்டன் தலைமையிலான மருத்துவ குழுவினர் மூங்கில்துறைப்பட்டு பகுதிகளில் மருந்து தெளிக்கும் பணியை மேற்கொண்டனர். தொடர்ந்து வீடு வீடாகச் சென்று பொதுமக்களுக்கு மலேரியா நோய் பரவும் விதம், கட்டுப்படுத்தும் வழி முறைகள் குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டன. மேலும் தேவையான மருந்துகளும் வழங்கப்பட்டன.

மருந்து தெளிப்பதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிப்பதோடு மட்டுமின்றி மலேரியாவை கட்டுப்படுத்துவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்றும் சுகாதாரத்துறை சார்பில் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதில் பூச்சியல் வல்லுனர் கலைச்செல்வி, ஊராட்சி மன்ற தலைவர் பரமசிவம், சுகாதார மேற்பார்வையாளர் ரவி, சுகாதார ஆய்வாளர் பாலசேகர் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story