மலேரியா தடுப்பு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி


மலேரியா தடுப்பு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி
x

ஆயர்பாடி, ஈராளஞ்சேரி ஊராட்சிகளில் மலேரியா தடுப்பு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி நடந்தது.

ராணிப்பேட்டை

காவேரிப்பாக்கம்

ஆயர்பாடி, ஈராளஞ்சேரி ஊராட்சிகளில் மலேரியா தடுப்பு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி நடந்தது.

உலக மலேரியா தினத்தை முன்னிட்டு காவேரிப்பாக்கம் வட்டாரத்தில் ஆயர்பாடி, ஈராளஞ்சேரி ஆகிய ஊராட்சிகளில் மலேரியா தடுப்பு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ஆயர்பாடியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தி தலைமை தாங்கினார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கந்தசாமி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியின்போது சுகாதார அலுவலர்கள் கூறுகையில், ''மலேரியா காய்ச்சல் 'அனாபிலக்ஸ்' என்ற பெண் கொசுமூலம் உருவாகிறது. 2 நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று ரத்த பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அனைவரும் வீட்டையும் சுற்றுப்புறங்களையும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்'' என்றனர்.

தொடர்ந்து உலக மலேரியா தினத்தை முன்னிட்டு 100நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு மலேரியா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதன்பின்பு விழிப்புணர்வு உறுதிமொழியும் எடுத்துக்கொள்ளப்பட்டது.

தில் மருத்துவமல்லா மேற்பார்வையாளர் மோகனசுந்தரம், சுகாதார ஆய்வாளர்கள் தமிழ்ச்செல்வன், குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதேபோல் ஈராளஞ்சேரியில் ஊராட்சி மன்ற தலைவர் திவ்யபாரதி தலைமையில் மலேரியா குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.


Next Story