பயணிகள் நிழற்குடையில் ஆண் பிணம்
பயணிகள் நிழற்குடையில் ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார்.
பெரம்பலூர்
பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் அய்யலூர் செல்லும் சாலையில் உள்ள முதல் பஸ் நிறுத்தம் பயணிகள் நிழற்குடையில் குப்பைகளுக்கு மத்தியில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் நேற்று இறந்து கிடந்தார். இதனை கண்ட அந்த வழியாக சென்றவர்கள் பெரம்பலூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இறந்து கிடந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்?, அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர்?, எப்படி இறந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்து கிடந்தவர் கட்டம் போட்ட முழுக்கை சட்டையும், லுங்கியும் அணிந்திருந்தாக போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story