தூக்கில் ஆண் பிணம்


தூக்கில் ஆண் பிணம்
x

கிருஷ்ணகிரியை அடுத்த போகனப்பள்ளியில் தூக்கில் ஆண் பிணம்; யார் அவர்? போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியை அடுத்த போகனப்பள்ளியில், கிருஷ்ணகிரி-சென்னை தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ள மன்னன் காலனியில் உள்ள மரத்தில் கடந்த 16-ந் தேதி சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் பிணம் தூக்கில் தொங்கி கொண்டு இருந்தது. இறந்தவர் யார்? என தெரியவில்லை.

இது குறித்து போகனப்பள்ளி கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசன் கொடுத்த புகாரின் பேரில் கிருஷ்ணகிரி டவுன் போலீசார் அங்கு விரைந்து சென்று வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story