அடையாளம் தெரியாத ஆண் பிணம்


அடையாளம் தெரியாத ஆண் பிணம்
x

பள்ளிபாளையத்தில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் கிடந்தது.

நாமக்கல்

பள்ளிபாளையம்

பள்ளிபாளையம்-சங்ககிரி செல்லும் சாலையில் தெற்கு பாளையம் பகுதியில் உள்ள வாய்க்காலில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடந்தார். அதைப்பார்த்த அந்த வழியாக வந்தவர்கள் பள்ளிபாளையம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் அடையாளம் தெரியாத ஆண் உடலை மீட்டு பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். வாய்க்காலில் இறந்து கிடந்தவர் வெள்ளை வேட்டி கட்டி இருந்தார். சிவப்பு நிற பெட்ஷீட் போர்த்தி இருந்தார். அவர் யார்? எந்த ஊர்? என்று தெரியவில்லை? இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story