பாழடைந்த வீட்டில் தூக்கில் ஆண் பிணம்
பாழடைந்த வீட்டில் தூக்கில் ஆண் பிணம் தூக்கில் தொங்கியது.
வேலூர்
அணைக்கட்டு
பாழடைந்த வீட்டில் தூக்கில் ஆண் பிணம் தூக்கில் தொங்கியது.
ஓடுகத்தூரை அடுத்து சேர் பாடி கூட்ரோட்டில் உள்ள வீடு ஒன்று பாழடைந்து காணப்படுகிறது. இந்த நிலையில் வீட்டின் வராண்டாவில் ஆண் ஒருவரின் பிணம் தொங்கியது. தகவல் அறிந்த வேப்பங்குப்பம் போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றினர்.
பிணமாக கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. பிணமாக கிடந்தவர் நீல நிறத்தில் சட்டையும் கட்டம் போட்ட லுங்கியும் அணிந்திருந்தார். அந்த நபர் துண்டால் தூக்குப்போட்டிருக்கலாம் என தெரிகிறது. முதல்கட்ட விசாரணைக்கு பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story