வாய்க்காலில் ஆண் பிணம்


வாய்க்காலில் ஆண் பிணம்
x

வாய்க்காலில் ஆண் பிணம்

தஞ்சாவூர்

அம்மாப்பேட்டை:

அம்மாப்பேட்டை அருகே கம்பர் நத்தம் ஊராட்சியில் அக்கரை நெடுந்தெருவில் உள்ள நெய்வாசல் தென்பாதி வாய்க்காலில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணம் கிடந்தது. இதுகுறித்து கம்பர்நத்தம் ஊராட்சி மன்ற தலைவர் சத்தியநாராயணன் மற்றும் ஊராட்சி செயலர் மோகன் குமார் ஆகியோர் கொடுத்த தகவல் பேரில் அம்மாப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கரிகார்சோழன், சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மனோகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வாய்க்காலில் பிணமாக கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story