ஆற்றில் ஆண் பிணம்


ஆற்றில் ஆண் பிணம்
x
தினத்தந்தி 28 July 2023 12:15 AM IST (Updated: 28 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை அருகே ஆற்றில் ஆண் பிணம்

மயிலாடுதுறை


மயிலாடுதுறை அருகே மாப்படுகை பகுதியில் காவிரி ஆற்றில் நேற்று காலை ஆண் பிணம் ஒன்று கிடந்துள்ளது. இதனை கண்ட அப்பகுதி பொதுமக்கள் மயிலாடுதுறை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் மயிலாடுதுறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் ஆற்றில் பிணமாக கிடந்தவர், மயிலாடுதுறை பட்டமங்கல ஆராய தெருவை சேர்ந்த சுப்ரமணியன் மகன் கோபு (வயது 45) என்பது தெரியவந்தது. எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்த கோபு, சமீபத்தில் ஏற்பட்ட விபத்தில் தனது இடது கையில் ஒரு பகுதியை இழந்தார். இதனால் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று காலை மாப்படுகை காவிரி ஆற்றில் குளிக்க சென்றதாக தெரிகிறது. அப்போது ஆற்றில் தவறி விழுந்து கோபு இறந்திருக்கலாம் என்று போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்து மயிலாடுதுறை போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story