பூட்டிய வீட்டுக்குள் ஆண் பிணம்


பூட்டிய வீட்டுக்குள் ஆண் பிணம்
x

பாளையங்கோட்டையில் பூட்டிய வீட்டுக்குள் ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார்.

திருநெல்வேலி

பாளையங்கோட்டை பெருமாள்புரம் திருநகர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பையா மகன் செந்தில் (வயது 40). இவர் தனியாக வசித்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம்பக்கத்தினர் பெருமாள்புரம் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தனர். அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து போலீசார், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு செந்தில் உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். அவரது உடலை போலீசார் கைப்பற்றி பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தில் எப்படி? இறந்தார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story