'மாமன்னன்' திரைப்படம் வெளியீடு; சங்கரன்கோவிலில் தி.மு.க.வினர் வரவேற்பு


மாமன்னன் திரைப்படம் வெளியீடு; சங்கரன்கோவிலில் தி.மு.க.வினர் வரவேற்பு
x
தினத்தந்தி 29 Jun 2023 6:45 PM GMT (Updated: 30 Jun 2023 8:53 AM GMT)

சங்கரன்கோவிலில் மாமன்னன் திரைப்படத்துக்கு தி.மு.க.வினர் பெரும் வரவேற்பு அளித்தனர்.

தென்காசி

சங்கரன்கோவில்:

தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் நடித்த மாமன்னன் திரைப்படம் நேற்று வெளியானது. இந்நிலையில் நேற்று சங்கரன்கோவில் கீதாலாயா திரையரங்கில் அந்த படம் திரையிடப்பட்டது.

இதனை முன்னிட்டு மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. படம் பார்க்க வந்த ரசிகர்களுக்கு இனிப்புகள் மற்றும் டிக்கெட்டுகள் வழங்கப்பட்டது.

இதில் நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன், மாவட்ட துணை செயலாளர் புனிதா, ஒன்றிய செயலாளர் பெரிய துரை, நகர செயலாளர் பிரகாஷ், உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற தலைவர் ஆர்.தலைவர், செயலாளர் சாமுவேல் முத்தையா, மாவட்ட இளைஞரணி சரவணன், நகர அவை தலைவர் முப்பிடாதி, நகர துணைச் செயலாளர்கள் கே.எஸ்.எஸ்.மாரியப்பன், முத்துக்குமார், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் ராஜா என்ற ராசையா, கவுன்சிலர்கள் அலமேலு, செல்வராஜ், வார்டு செயலாளர்கள் வாழைக்காய் துரைப்பாண்டியன், தங்கவேல், வீரா, வீரமணி, சிவா, கோமதிநாயகம், மாணவரணி கார்த்தி, சிவாஜி, ஜெயக்குமார், பிரகாஷ், வக்கீல் சதிஷ், பால் குட்டி, வீமராஜ், பசுபதி பாண்டியன், ஜான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story