கேரள செண்டை மேளம் வாசித்த மம்தா பானர்ஜி - ஆச்சரியத்தில் மூழ்கிய இசைக்கலைஞர்கள்


கேரள செண்டை மேளம் வாசித்த மம்தா பானர்ஜி - ஆச்சரியத்தில் மூழ்கிய இசைக்கலைஞர்கள்
x

கேரள செண்ட மேளம் வாசிக்கும் கலைஞர்களுடன் இணைந்து மம்தா பானர்ஜி மேளம் வாசித்து அசத்தினார்.

சென்னை,

மணிப்பூர் கவர்னரும், மேற்கு வங்காள பொறுப்பு கவர்னருமான இல.கணேசன் இல்ல விழா, இன்று (வியாழக்கிழமை) சென்னையில் நடக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி சென்னைக்கு வருகை தந்துள்ளார்.

முன்னதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்திற்கு நேரில் சென்று மம்தா பானர்ஜி சந்தித்தார். இந்த சந்திப்பின்போது மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின், மம்தா பானர்ஜிக்கு பரிசு பொருட்களை வழங்கினார். இந்த சந்திப்பின் போது அரசியல் தொடர்பாக எதுவும் ஆலோசிக்கவில்லை என்றும், மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடைபெற்றதாகவும் மம்தா பானர்ஜி கூறினார்.

இதைத் தொடர்ந்து இன்று இல.கணேசன் சகோதரரின் 80-வது பிறந்தநாள்(சதாபிஷேக விழா) நிகழ்ச்சியில் மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். அங்கு கேரள செண்ட மேளம் வாசிக்கும் கலைஞர்களுடன் இணைந்து மம்தா பானர்ஜி மேளம் வாசித்து அசத்தினார். இது அங்கிருந்தோரை வியப்பில் ஆழ்த்தியது.

இது குறித்து செண்டை மேளம் வாசிக்கும் இசைக்கலைஞர்கள் கூறுகையில், மேற்கு வங்கத்தின் முதல்-மந்திரி தங்களுடன் இணைந்து மேளம் வாசித்தது தங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், ஆச்சரியத்தையும் அளித்ததாக தெரிவித்தனர்.


Next Story