ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்றவர் கைது


ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்றவர் கைது
x

ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்றவர் கைது செய்யப்பட்டார்.

தஞ்சாவூர்

அம்மாப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கரிகார்சோழன் மற்றும் போலீசார் சம்பவத்தன்று ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அம்மாப்பேட்டை ரெயில்வே கேட், முத்துப்பிள்ளை தெரு பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுகளை ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்து ஒருவர் விற்றுக் கொண்டிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் அங்கு ஆன்லைன் மூலம் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த கரந்தை குதிரை கட்டி தெருவை சேர்ந்த சதீஷ்குமார் (வயது38) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து செல்போன், ரூ.14,460, ஒரு மோட்டார் சைக்கிள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்றவர் கைது


Next Story