மதுபான கடை சூப்பர்வைசரை தாக்கியவர் கைது


மதுபான கடை சூப்பர்வைசரை தாக்கியவர் கைது
x

மதுபான கடை சூப்பர்வைசரை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை

மதுபான கடை சூப்பர்வைசரை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்

ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட்டில் தனியார் கெமிக்கல் தொழிற்சாலை அருகே அரசு மதுபான கடை உள்ளது. இந்த கடையில் வேலூர் சத்துவாச்சாரி பகுதியை சேர்ந்த பட்டாபிராமன் (வயது 51) என்பவர் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் சிப்காட் வ.உ.சி. நகர் பகுதியை சேர்ந்த டெல்லி என்கிற முருகானந்தம் (52) என்பவர் முன்விரோதம் காரணமாக, பட்டாபிராமனை கடையில் இருந்து கீழே தள்ளி தாக்கியதாக தெரிகிறது. இதில் காயமடைந்த பட்டாபிராமன் சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து, முருகானந்தத்தை கைது செய்தனர்.


Next Story