தனியார் நிதி நிறுவன ஊழியரை தாக்கியவர் கைது
தனியார் நிதி நிறுவன ஊழியரை தாக்கியவர் கைது
விழுப்புரம்
விழுப்புரம்
செஞ்சி தாலுகா கடம்பூரை சேர்ந்தவர் பசாஜி(வயது 31). விழுப்புரத்தில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் பணம் வசூல் செய்பவராக பணியாற்றி வரும் இவரிடம் விழுப்புரம் அருகே நன்னாடு காலனியை சேர்ந்த விஜயபாபு(22) என்பவர் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு சரக்கு வாகனம் வாங்க ரூ.80 ஆயிரம் கடன் பெற்றார். அந்த பணத்தை விஜயபாபு சரியாக கட்டாததால், இதுபற்றி அவரிடம் சென்று பசாஜி கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த விஜயபாபு, பசாஜியை திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பசாஜி கொடுத்த புகாரின் பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயபாபுவை கைது செய்தனர்.
Related Tags :
Next Story