பள்ளிபாளையம்ஓய்வுபெற்ற அதிகாரியை தாக்கியவர் கைது

நாமக்கல்
பள்ளிபாளையம்
பள்ளிபாளையம் அருகே அண்ணா நகரை சேர்ந்தவர் நடராஜன் (வயது 58). மின்சார துறையில் ஓய்வு பெற்ற அதிகாரி. இவரது மனைவி இந்திராணி. இந்தநிலையில் கணவன்-மனைவி இருவரும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இது குறித்து தகவல் அறிந்த இந்திராணியின் தம்பி கந்தம்பாளையம் பகுதியை சேர்ந்த விவசாயி செல்லதுரை (42) என்பவர் அண்ணா நகர் வந்து அக்காளிடமும், அக்காள் கணவர் நடராஜனிடம் கேட்டார். இதைத்தொடர்ந்து செல்லதுரைக்கும், நடராஜனுக்கும் தகராறு முற்றியது. அப்போது செல்லதுரை, நடராஜனை கட்டையால் தாக்கி உள்ளார். இது பற்றி நடராஜன் பள்ளிபாளையம் போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகுமார் வழக்குப்பதிவு செய்து செல்லதுரையை கைது செய்து கோர்ட்டில் ஒப்படைத்தார்.
Related Tags :
Next Story






