வாலிபரை மதுபாட்டிலால் தாக்கியவர் கைது
வாலிபரை மதுபாட்டிலால் தாக்கியவர் கைது
கபிஸ்தலம் அருகே வாலிபரை மதுபாட்டிலால் தாக்கியவரை போலீசார் கைது ெசய்தனர். இதில் தொடர்புடைய 2 பேரை வலைவீசி தேடிவருகின்றனர்.
மதுபாட்டிலால் தாக்குதல்
கபிஸ்தலம் அருகே உள்ள கணபதி அக்ரஹாரம் தெய்வலோகப்படுகை பகுதியில் வசிப்பவர் மணி மகன் ராஜா(வயது33). சம்பவத்தன்று இவர் தனது உறவினர் காதணி நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு மோட்டார்சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது பின்புறம் அதிவேகமாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் அதிக சத்தத்துடன் ஒலி எழுப்பி வந்துள்ளனர். இதனை தட்டிக்கேட்ட ராஜாவை தகாத வார்த்தைகளால் திட்டி மதுபாட்டிலால் தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
வாலிபர் கைது
இதுகுறித்து ராஜா கொடுத்த புகாரின் பேரில் கபிஸ்தலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருவையாறு தாலுகா கடுவெளி பகுதியில் வசிக்கும் சிவாஜி மகன் ஸ்ரீகாந்த்(20) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள 2 பேரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.