ரேஷன் அரிசியை மாவாக அரைத்து விற்றவர் கைது
ரேஷன் அரிசியை மாவாக அரைத்து விற்றவர் கைது
கோவை
கோவையில் ரேஷன் அரிசியை மாவாக அரைத்துவிற்றவரை கைது செய்து, உணவு கடத்தல் தடுப்பு போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.
ரேஷன் அரிசி கடத்தல்
ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்குஇலவசமாக வழங்கப்படும் ரேஷன் அரிசியை, குறைந்த விலைக்கு வாங்கி அதனை கேரளா, மற்றும் கோவையில் உள்ள வடமாநில தொழிலாளர்களுக்கு சிலர் விற்பனை செய்து வருகிறார்கள். இதுதவிர ரேஷன் அரிசியை மாவாக அரைத்தும் விற்பனை செய்யப்படுகிறது.
இது பற்றிய தகவல் அறிந்த உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அர்ஜுன்குமார் மற்றும் போலீசார் வடவள்ளி-இடையர் பாளையம் சாலையில் உள்ள ஒரு குடோனில் திடீர் சோதனை நடத்தினார்கள்.
மாவாக அரைத்து விற்பனை
அங்கு ரேஷன் அரிசியை மாவாக அரைத்து, பலகாரங்கள் போடும் கம்பெனிகளுக்கு விற்பனை செய்வது கண்டறியப்பட்டது.
இதுதொடர்பாக இடையர்பாளயைம், நீலியம்மன் நகரை சேர்ந்த ஞானசேகர் (வயது42) என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 500 கிலோ ரேஷன் அரிசி, 200 கிலோ அரைக்கப்பட்டரேஷன் அரிசி, ஒரு மொபட் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. கைதான ஞானசேகர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
கோவை மற்றும் புறநகர் பகுதிகளில் ரேஷன் அரிசி கடத்தும் ஆசாமிகள் குறித்து பொதுமக்கள் உணவு கடத்தல் தடுப்பு பிரிவுக்கு தகவல் தெரிவிக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.