வீட்டில் புகையிலை பொருட்கள் பதுக்கியவர் கைது
வீட்டில் புகையிலை பொருட்கள் பதுக்கியவர் கைது செய்யப்பட்டார்.
கரூர்
கிருஷ்ணராயபுரம் அருகே காட்டூரில் உள்ள ஒரு வீட்டில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக மாயனூர் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் போலீசார் அந்த பகுதியில் அந்த வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது காட்டூரை சேர்ந்த வில்சன்பாபு (வயது 33), மாயனூரை சேர்ந்த பாக்கியராஜ் ஆகிய 2 பேரும் சேர்ந்து பெங்களூருவில் இருந்து மொத்தமாக புகையிலை பொருட்களை வாங்கி வந்து விற்பனைக்காக வில்சன்பாபு வீட்டில் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வில்சன்பாபுவை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் வீட்டில் இருந்த 169 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தப்பியோடிய பாக்கியராஜை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story