தொழிலாளியிடம் தங்க சங்கிலி பறித்தவர் கைது


தொழிலாளியிடம் தங்க சங்கிலி பறித்தவர் கைது
x

தொழிலாளியிடம் தங்க சங்கிலி பறித்தவர் கைது செய்யப்பட்டனர்.

கரூர்

கரூர் ரத்தினம் சாலையை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 39). கூலி தொழிலாளி. இவர் சம்பவத்தன்று திருமாநிலையூர் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அந்த வழியாக நடந்து வந்த மர்ம நபர் ஒருவர் பாலமுருகன் கழுத்தில் அணிந்திருந்த 1½ பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றார்.

இதுகுறித்து பாலமுருகன் கொடுத்த புகாரின்பேரில், தாந்தோணிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அழகுராம் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினார்.

விசாரணையில், பாலமுருகனிடமிருந்து தங்க சங்கிலியை பறித்து சென்றது திருமாநிலையூரை சேர்ந்த ராமன் (33) என்பது தெரிய வந்தது. இதையடுத்து ராமனை போலீசார் கைது செய்தனர்.


Next Story