பள்ளி மாணவரை கத்தியால் குத்தியவர் கைது
கோவை சிங்காநல்லூரில் காதல் விவகாரத்தில் பள்ளி மாணவரை கத்தியால் குத்தியவர் கைது செய்யப்பட்டார்.
கோயம்புத்தூர்
சிங்காநல்லூர்
கோவை சிங்காநல்லூர் ஒண்டிப்புதூரை சேர்ந்த 16 வயது மாணவர் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் ஒரு மாணவியை காதலித்தார். இது தொடர்பாக அந்த மாணவியின் அண்ணனுக்கும், 11-ம் வகுப்பு மாணவனுக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டது.
இந்த நிலையில், அந்த பகுதியில் உள்ள ஒரு கோவில் திருவிழாவுக்கு சென்றபோது அந்த மாணவனுக்கும், மாணவியின் அண்ணனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மாணவியின் அண்ணன், அந்த மாணவனை கத்தியால் குத்திவிட்டு தப்பிச்சென்றார்.
இதுகுறித்த புகாரின்பேரில் சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியின் அண்ணனான 17 வயது சிறுவனை கைது செய்து சிறுவர் சீர்த்திருத்தப்பள்ளியில் அடைத்தனர்.
Related Tags :
Next Story