செல்போன் கோபுரத்தில் பேட்டரி திருடியவர் கைது


செல்போன் கோபுரத்தில் பேட்டரி திருடியவர் கைது
x

இட்டேரி பகுதியில் செல்போன் கோபுரத்தில் பேட்டரி திருடியவரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி

பாளையங்கோட்டையை சேர்ந்தவர் சேகர் (வயது 60). இவர் பாளையங்கோட்டை அருகே இட்டேரி பகுதியில் உள்ள தனியார் செல்போன் கோபுரத்தின் ரோந்து அலுவலராக வேலை பார்த்து வருகிறார். நேற்று அதிகாலை சேகர் பணியில் இருக்கும் போது செல்போன் கோபுரம் பகுதியில் இருந்து சென்சார் மூலம் சேகர் செல்போன் எண்ணிற்கு எச்சரிக்கை தகவல் கிடைத்தது. அதன்பேரில் செல்போன் கோபுரம் பகுதிக்கு சென்று பார்த்தபோது, கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த குமார் (வயது 24) என்பவர் அங்கிருந்த பேட்டரியை திருடி விட்டு, சம்பவ இடத்திலேயே தூங்கி உள்ளார். பின்னர் சேகர், அவரை பிடித்து முன்னீர்பள்ளம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். இதுபற்றிய புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி குமாரை கைது செய்தார்.


Next Story