ஓட்டல் ஊழியரிடம் செல்போன்கள் திருடியவர் கைது


ஓட்டல் ஊழியரிடம் செல்போன்கள் திருடியவர் கைது
x

ஓட்டல் ஊழியரிடம் செல்போன்கள் திருடியவர் கைது செய்யப்பட்டாா்.

ஈரோடு

பெருந்துறை

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அழகம்பட்டியைச் சேர்ந்த முருகலிங்கம் என்பவர் மகன் தினேஷ் (வயது 20). இவர் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே விஜயமங்கலத்தில் உள்ள ஓட்டல் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இந்தநிலையில் சம்பவத்தன்று வேலை முடிந்து தினேஷ் தனது அறையில் தூங்கினார். அடுத்த நாள் காலை அவர் எழுந்து பார்த்தபோது அவரது 2 செல்போன்களை காணவில்லை. இதனால் அவர் ஓட்டல் முழுவதும் தேடிப்பார்த்தார். ஆனால் செல்போன் கிடைக்கவில்லை. மேலும் ஓட்டலில் வேலை பார்த்த புதுச்சேரியை சேர்ந்த ஷியாம் என்பவரையும் காணவில்லை.

இதனால் அவர் தான் செல்போனை திருடி இருக்க வேண்டும் என்று பெருந்துறை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்தநிலையில் நேற்று விஜயமங்கலம் பஸ் நிறுத்தத்தில் ஷியாம் நின்றுகொண்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற போலீசார் அவரை பிடித்து விசாரித்தபோது அவர் தான் தினேசின் செல்போன்களை திருடியதாக தெரிவித்தார். அதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 2 செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story