பெண் ஊழியரின் சைக்கிளுடன் தபால் பொருட்களை திருடியவர் கைது
பெண் ஊழியரின் சைக்கிளுடன் தபால் பொருட்களை திருடியவர் கைது செய்யப்பட்டார்.
பெண் ஊழியரின் சைக்கிளுடன் தபால் பொருட்களை திருடியவர் கைது செய்யப்பட்டார்.
பெண் தபால் ஊழியர்
மதுரை பசுமலையை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவருடைய மகள் திவ்யா (வயது 27). பசுமலை தபால் நிலையத்தில் ஊழியராக உள்ளார். சம்பவத்தன்று மதியம் இவர் வீடு மற்றும் நிறுவனங்களுக்கு சேர வேண்டிய தபால் பொருட்களை எடுத்துக்கொண்டு சைக்கிளில் சென்றார். அப்போது திருப்பரங்குன்றம் ரோட்டில் ஒரு வீட்டுக்கு தபால் கொடுக்க வேண்டி இருந்தது.
எனவே அங்குள்ள போலீஸ் பூத் அருகே சைக்கிளை நிறுத்தி விட்டு அவரது வீட்டிற்கு சென்றார். திரும்பி வந்து பார்த்த போது தபால் பொருட்களுடன் சைக்கிளை யாரோ திருடி சென்று விட்டது தெரியவந்தது. அதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து சுப்பிரமணியம் போலீசாரிடம் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
திருடியவர் கைது
அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் பைக்காரா முத்துராமலிங்கபுரம் மேட்டு தெருவை சேர்ந்த பாண்டி(46) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் சைக்கிளை திருடியதை ஒப்புக்கொண்டார். அதை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து, அனைத்து பொருட்களையும் மீட்டனர்.